தனியாக படம் பார்ப்பது என்பது நான் செய்யயவே விரும்பாத விஷயங்களில் ஒன்று. ஆனால் ஜேடன் ஸ்மித்-ன் தலை முடியும் , அவரது cute -ஆன முகமும், தல ஜாக்கி ஜானும் என்னை தனியே படம் பார்க்க தூண்டின(ர்) .சரக்கும் சைடிசும் வாங்கித் தருவதாக நண்பன் கொடுத்த மெகா ஆப்பரை புறக்கணித்து விட்டு படம் பார்பதென முடிவு செய்தேன்.
தந்தையை இழந்த ஜேடன் ஸ்மித் தன் தாயுடன் டெட்ராய்ட்-ல் இருந்து சீனா செல்வதில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. விமானத்தில் ஹீரோ (ஜேடன் ஸ்மித்) சீன மொழியில் சக பயணியுடன் பேச முற்பட்டு மொக்கை வாங்கிக்கொள்ளும் காட்சி , படம் நெடுக இயல்பான நகைச்சுவை இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
ஆண்கள் வாழ்க்கையில் ஒரு பிரச்னை என்றால் அதருக்கு முக்கியமான,மூத்த காரணங்களில் முதலிடம் வகிக்கபது பெண்கள் தான். இந்த படத்திலும் அப்படியே.நம்ம ஹீரோ , அங்கே இருக்கும் அழகான பெண்ணை கரெக்ட் செய்வதும் பிடிக்காமல் அங்கேயும் ஒரு வில்லச்சிறுவன் , இவனை துவைத்து எடுக்கிறான். அந்த வில்லன் படிக்கும் பள்ளியிலயே நம்ம ஹீரோ சேர நிலைமை மிக மோசமாகிறது. எவ்வளோ அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்டா என்று நம்மை பரிதாப பட வைக்கிறார் ஜேடன்.
"Karate kid " என்ற உடனே இது சிறுவர்களுக்கான சில்லறை படம் என்று நினைக்கவேண்டாம். நம்மாளு(ஜேடன்) அந்த பெண்ணுடன் அடிக்கும் லூடிகளெல்லாம் நம்ம சிம்பு ,கமல் எல்லாரும் அவரிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்று சொல்ல தோன்றுகிறது.சும்மா சொல்லகூடாது அந்த குட்டிபெண்ணும் மைதா பொம்மை போல அவளோ அழகாக இருக்கிறது. (இந்த மாறி ஸ்கூல் படிக்கும் போது நமக்கு ஒரு பிரன்ட் இல்லையே என வயிறேரிய வைக்கிறது)
அடிவாங்கிக்கொண்டே இருக்க நம்ம ஹீரோ என்ன நம்ம ஹீரோ சும்பை பயலா சும்மா கில்லியில்ல . ஜீரோ-வாக இருப்பவரை ஹீரோ-வாக ஆக்க வருகிறார் நம்ம தலை ஜாக்கி ஜான். நம்ம ஆசியான் superstar -ஐ காட்டியே உடனே விசில் சதம் தியேட்டர் கூரையை கிழிக்கிறது (நீ எப்பவுமே வேர்ல்ட் கிளாஸ் மாஸ் தல). நம்ம தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் அரை குறையாய் நடித்த ஹீரோக்களே ஓராயிரம் பில்டப்புகள் குடுக்கும் போது எந்த பரபரப்பும் பந்தாவும் இல்லாமல் அறிமுகம் ஆகிறார் ஜாக்கி ஜான் (தல ,தள பதிகளெல்லாம் இவரிடம் இருது கற்றுக்கொள்ளுங்கள்) .
குட்டி ஹீரோவுக்கு இவர் பத்ரியிலும் , M குமரன் படத்தில் வருவதும் போல வெயிட்டான பின்னணி இசையுடன் ட்ரைனிங் குடுப்பார் என்று பார்த்தல் மனிதர் ஜெடனை அவனது ஓவர்கோட்தை கழட்டி மாட்டிகொண்டே இருக்குமாறு ஒருவாரதிருக்கு மேல் ட்ரைனிங் கொடுக்கிறார்.என்னடா இது இப்பிடி மொக்கை போடுகிறார்கள் என்று நொந்து கொண்டு இருக்கும் வேளையிலே அது எதற்கு என்று தெரியவரும் போது என்னை அறியாமல் வெறித்தனமாக கையை தட்டி விட்டேன்.
ஜாக்கி ஜானின் எந்த ஈகோவும் இல்லாத நடிப்பும் அபாரம். என்னதான் நடிப்பு என்றாலும் நீங்கள் வயதானவர் போல தளர்ந்து நடப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
குட்டி பையன் சும்மா பைட் சீன்களில் எல்லாம் சும்மா பிரித்து மேய்ந்து இருக்கின்றார். இந்த இளம் வயதில் பையன் செய்யும் எச்செர்சைஸ் எல்லாம் நம்மை ஆ- வென வாய்பிளக்க வைக்கின்றன . பால்வடியும் முகத்தில் சண்டை காட்சிகளில் அவ்வளவு ஆக்ரோஷம் காட்டுவது மிகவும் ஆச்சர்யம் காட்டுகிறது.
வழக்கமான ஆக்சன் படங்கள் போல அல்லாமல் இதில் எல்லாமே இருக்கிறது அம்மா - பையன், மெல்லிய சோகம், காதல் மற்றும் நகைச்சுவை. வழக்கமான் குங்பூ படங்களில் வருவது போன்ற தவளை மாறி தாவி அடிப்பது , நாடு ஆற்றில் நின்று கொண்டு சண்டை இடுவது, காற்றிலயே மிதப்பது போன்ற அபத்தங்கள் இல்லாமல் மிக இயல்பாக எடுத்து இருக்கிறார்கள் இப்படத்தை.
வாரிசுகளை அறிமுகபடுத்தும் கலாச்சாnaரத்திற்கு அமெரிக்கர்கள் மட்டும் விதி விளக்க என்ன வில் ஸ்மித் , ஜடா பின்கட் ஸ்மித் ஆகிய நட்சத்திர ஜோடியின் மகன் தான் இந்த சேடன் ஸ்மித் . நிஜம்மாகவே இந்த பாத்திரதுக்காக மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் ஜேடன் . இவரது போசெஸ் எல்லாம் பார்த்தாலே ஏதோ 7 (அ) 8 வருடங்கள் பயிற்சி எடுத்தது போல உள்ளது.
ர்டூன் படம் முதல் இலக்கிய படம் வரை கிஸ் இல்லாத ஆங்கில படத்தை நீங்கள் பார்க்க முடியாது. இந்த படமும் இதற்க்கு விதி விலக்கல்ல. குடுப்பது யார் பெறுவது யார் என்று நீங்களே படம் பார்த்து அதிர்ச்சி அடைந்து கொள்ளுங்கள்.
குறைகள் என்று சொன்னால் கொஞ்சம் மெதுவாக நகரும் திரை கதை தான் . டைரக்ட்டர் இன்னும் கொஞ்சம் பைட் சீன்களை வைத்து இருக்கலாம் .லேசான ஏமாற்றம் எட்டி பார்ப்பது உண்மை தான்.
இந்த படம் பார்த்ததில் இருந்து நான் ஜெடனின் பேன் ஆகி விட்டேன்.கண்டிப்பா குடும்பத்துடன் சென்று என்ஜாய் செய்ய வேண்டிய படம். சீக்கிரம் போய் பாருங்க.
பி.கு:-
சரி ஒரு சின்ன சந்தேகம் குங்பூ கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படைத்திருக்கு ஏன் கராத்தே கிட் என்று பெயர் வைத்தார்கள். இந்த கேள்வியை நீ 1984 - லிலேயே கேட்டு இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது புரிகிறது. ஏன் என்றால் அந்த கராத்தே கிட்டின் ரீமேக் தான் இந்த படம்.