நகைச்சுவை பிடிக்கும் எல்லோருக்கும் சேத்தன் பகத்தை பிடிக்கும்.ஸ்ட்ரெஸ்ட் அவுட் பிரச்சனை உடன் மருத்துவிடம் சென்றால் சேத்தன் நாவலை படியுங்கள் என்று பரிந்துரைக்கும் அளவிற்கு உங்களை கல கலப்பு ஊட்ட கூடியவர் இவர்.
எனக்கு பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆங்கிலத் தேர்வு என்றாலே வேப்பங்காய் கசப்பு. அதுவும் கட்டுரையை மனனம் செய்ய வேண்டும் என்றால் விளகெண்ணை குடித்தது போல வயிற்றை கலக்க ஆரம்பித்து விடும்.
நான் ஆங்கில நாவல் எல்லாம் மூச்சு விடாமல் மூன்று மணி நேரத்தில் படித்து முடிப்பேன் என்று கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை. ஏன் என்றால் பள்ளியில் ஆங்கிலத்தில் பேசாதத்ற்காக அதிகமாக அபராதம் கட்டி ரெகார்ட் பிரேக் செய்தது நான் தான்.
என்னை போன்ற பல லட்சம் ,அவ்வளவான ஆங்கில அடித்தளம் இல்லாத இளைனஞர் கூட ரசிக்கும் வகையில் கருத்து எளிமையிலும் ,நடை அளிமையிலும் பிரமிக்க வைக்கிறார் நம்ம தல "சேத்தன்".
என்னதான் இலக்கியமயமாக படம் எடுத்தாலும் நம்மை குதுகுலம் கொள்ளச் செய்வது ஜனரஞ்சகமான மசாலா படங்கள் தான்.அது போன்று மொநோட்டனௌஸ்-aana இந்திய ஆங்கில நாவல் உலகத்திற்கு தனது யுனிக்-ஆன பார்முலாவுடன் புயலாய் நுழைந்தார் இவர்.
Danbrown - களின் Davinicicode களும் , Paul Cheolo - களின் Alchemist - களும் ஆதிக்கம் செலுதிக்கொண்டு இருந்த நம் நாட்டில் ,எல்லாவற்றிக்கும் ஆப்பு வைத்து விட்டு அதிக விற்பனையுடன் கோலோசிவயர்.
நான் (நானே) ஆங்கிலத்தில் ப்ளாக்(Blog) செய்யும் அளவிற்க்கு (கஷ்டம் எல்லாம் படிக்கிறவங்களுக்கு தான் ) என்னை உற்சாக படுத்தி உந்துதலாக இருந்தது இவரது எழுத்தின் தாக்கம் தான்.
இவரது வெற்றிக்கு முக்கியமான காரணிகளாக இவற்றை சொல்வேன்,
1 . Humour Sense
2 . Simplicity
3 . Ability to connect with people
உங்களிடம் ஒரு கேள்வி , correspondance course - இல் பத்து ௦அரியர் வைத்து 7 வருடத்தில் பாஸ் செய்பவன்களே கோட் சூட் போட்டுக் கொண்டு வெற்று பில்டப் குடுக்க்ம் இந்த காலத்தில் எப்படித்தான் IIT & IIM - ல் படித்து விட்டு இவ்வளவு சிம்பிளாக இருக்க முடிகிறது உங்களால்.
என் ஆஸ்தான குரு நீங்கள் தான் சேத்தன் - Hats off
---- உங்கள் சிஷ்ய புள்ளை
இந்திரஜித்
0 Responses "சேத்தன் பகத் -The God of Humour"
Post a Comment